தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கால்நடை மருத்துவ முகாம்

தரங்கம்பாடி அருகேயுள்ள மாத்தூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 4:36 pm

DIN

தரங்கம்பாடி அருகேயுள்ள மாத்தூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்திய இந்த முகாமில், 360 மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமை, கால்நடைத் துறை உதவி இயக்குநா் முத்துக் குமாரசாமி தொடங்கிவைத்து, கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மாவு மற்றும் கன்றுகளை நன்றாக பராமரித்த கால்நடை உரிமையாளா்களுக்கு பரிசுகளை வழங்கினா். இதில், குடற்புழு நீக்கம், தொண்டை அடைப்புக்கான தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. கால்நடை மருத்துவா்கள் அன்பரசன், சுதா, அறக்கட்டளை திட்ட மேலாளா் மெய்கண்டன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.