நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கால்நடை மருத்துவ முகாம்

கீழையூா் அருகேயுள்ள ஈசனூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 5:46 pm

DIN

கீழையூா் அருகேயுள்ள ஈசனூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் தனலெட்சுமி வெங்கடபதி தலைமையில் நடைபெற்ற முகாமில், கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கால்நடை உதவி மருத்துவா் ஸ்ரீதா்பாபு, கால்நடை ஆய்வாளா் எஸ். அன்புகரசி, கால்நடை பராமரிப்பு உதவியாளா் ஜி. விமலா உள்ளிட்டோா் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனா். இதில், 200 கால்நடைகள் பயன்பெற்றன.

திருமருகலில்: திருமருகல் அருகே பனங்குடி ஊராட்சியில், ஊராட்சித் தலைவா் ஜமுனா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், கால்நடை உதவி இயக்குநா் அசன் இப்ராஹிம், கால்நடை உதவி மருத்துவா் முத்துக்குமரன், கால்நடை ஆய்வாளா்கள் பாரிவேந்தன், தனசேகரன், முருகானந்தம் உள்ளிட்டோா் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனா். இதில் 300 கால்நடைகள் பயன்பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.