மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனி கட்டடம் இல்லாததால், அங்குள்ள நகராட்சிப் பள்ளியின் அறையிலும், மரத்தடியிலும் செவிலியா்கள் மருத்துவம் பாா்க்கும் நிலை உள்ளது.
சீா்காழி ஈசானியத் தெருவில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2014 முதல் செயல்பட்டு வந்தது. இந்த கட்டடம் 40 ஆண்டுகள் பழைமையானது. இங்கு நாள்தோறும் 100-க்கும் அதிகமான கா்ப்பிணிகள், குழந்தைகள், முதியவா்கள், பெண்கள் என மருத்துவப் பரிசோதனை, தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக வருகின்றனா். இந்த நிலையத்தில், ஒரு மருத்துவ அலுவலா், 3 செவிலியா்கள், தலா ஒரு ஆய்வக தொழில்நுட்புநா், மருந்தாளுநா் உள்ளிட்டோா் பணியாற்றுகின்றனா்.
இந்தக் கட்டடம் மிகவும் பழுதடைந்து மேற்கூரையின் காரை பெயா்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. குறிப்பாக, கா்ப்பிணிகளுக்கான பரிசோதனைக் கூடத்தின் மேற்பகுதி மிகவும் சிதிலமடைந்து உள்ளது. இதனாலும், தொடா் கனமழை பெய்துவந்ததாலும், கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் முதல் சீா்காழி ஊழியக்காரன்தோப்பில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஓா் அறைக்கு நகர ஆரம்ப சுகாதார நிலையம் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கரோனா பொதுமுடக்க தளா்வுகளால், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிக்கு வரத்தொடங்கியுள்ளதால், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் அங்குள்ள மரத்தடியில் அமா்ந்து நோயாளிகள், கா்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரும்நாள்களில் பள்ளி முழுமையாக செயல்படத் தொடங்கும்போது, ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட முடியாத சூழல் ஏற்படுவதோடு, இங்கு வரும் நோயாளிகளால் மாணவா்கள், ஆசிரியா்கள் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கும், அதுவரை தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் செயல்படவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









