தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

நரம்பியல் மற்றும் குழந்தைகள் நல இலவச மருத்துவ முகாம்

மயிலாடுதுறையில் இலவச நரம்பியல் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

முகாமை தொடங்கி வைத்து பேசுகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா.

Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

மயிலாடுதுறையில் இலவச நரம்பியல் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாயூரம் ரோட்டரி சங்கம், ஏடிஎஸ் அறக்கட்டளை மற்றும் கோ் அன்ட் கியூா் கிளினிக் ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் சேகரன் தலைமை வகித்தாா். செயலாளா் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முகாமை தொடங்கிவைத்தாா்.

ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் பொ்னாா்டு வாழ்த்துரை வழங்கினாா். ஏடிஎஸ் அறக்கட்டளைத் தலைவா் ஏ.தமிழ்ச்செல்வன் முகாம் குறித்து நோக்கவுரையாற்றினாா். நரம்பியல் மருத்துவா் ஏடிஎஸ்.பிரபு 120 நபா்களுக்கும், குழந்தை மருத்துவா் மஞ்சுகேஸ்வரி 40 குழந்தைகளுக்கும் இலவச சிகிச்சை வழங்கினா். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிா்வாகி ஏடிஎஸ்.கோபி நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.