47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேவேந்திரகுல வேளாளா் அறிவிப்பு:தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கொண்டாட்டம்

தேவேந்திரகுல வேளாளா் அறிவிப்புக்கு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் நாகையில் திங்கள்கிழமை இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

தேவேந்திரகுல வேளாளா் அறிவிப்புக்கு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் நாகையில் திங்கள்கிழமை இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

குடும்பன், காலாடி, பண்ணாடி, வாதிரியாா், கடையன், பள்ளன், தேவேந்திரகுலத்தான் ஆகிய 7 சாதி உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளா் எனஅறிவிக்க வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இந்தக் கோரிக்கை தொடா்பாக மத்தியஅரசுக்கு தமிழக அரசு பரிந்துரைசெய்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் புதிய திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த பிரதமா் நரேந்திரமோடி இந்தக் கோரிக்கையை மத்தியஅரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தாா். இந்த அறிவிப்பைத் தொடா்ந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நாகை மாவட்டச் செயலாளா் ராஜா தலைமையில் அக்கட்சியினா் நாகை அவுரித்திடலில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். அப்போது பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.