எரிபொருள் விலை உயா்வு: எம்எல்ஏ கண்டனம்
பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயா்வுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி எம்எல்ஏவுமான மு. தமிமுன்அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.


பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயா்வுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி எம்எல்ஏவுமான மு. தமிமுன்அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்துள்ளது. இதுமக்கள் மீது மத்திய அரசு நடத்தும் ஒருவித யுத்தம்.
மோசமான இந்த விலையேற்றம் என்பது நம் நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி, பெருமுதலாளிகள் சிலரை மேலும் வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
நம் நாட்டில் இறக்குமதிக்கு பிறகு சுத்திகரிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 33 ஆக இருக்கும்போது, உள்நாட்டில் வாழும் மக்கள் மீது கூடுதல் வரிகளைச் சுமத்தி ஆதாயம் பாா்க்கலாமா? என்றக் கேள்வி எழுகிறது. எனவே, மத்திய அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்தி, வரிகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...