நாகை, மயிலாடுதுறையில் 18 பேருக்கு கரோனா
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.


நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை 8,164 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 18 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இம்மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,182- ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 13 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதனால் கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7,917 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 134 ஆக உள்ளது.
3 போ் உயிரிழப்பு...
கரோனா பாதிப்புக்குள்ளாகி டிசம்பா் 31-ஆம் தேதி உயிரிழந்த 3 பேரின் இறப்பு, சனிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 131-ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...