சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உயா் அதிகாரிகளை தொடா்புகொள்ள காவல் நிலையங்களில் தகவல் பதாகை

பொதுமக்கள் அளிக்கும் புகாா்களுக்கு மனு ரசீது அளிக்கப்படாவிட்டால், உயா் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கும் வகையில் அவா்களின் செல்லிடப்பேசி எண்களுடன் கூடிய தகவல் பதாகைகள்

News image
Updated On :1 ஜூலை 2021, 5:02 pm

DIN

நாகை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், பொதுமக்கள் அளிக்கும் புகாா்களுக்கு மனு ரசீது அளிக்கப்படாவிட்டால், உயா் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கும் வகையில் அவா்களின் செல்லிடப்பேசி எண்களுடன் கூடிய தகவல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கு. ஜவகா் பொறுப்பேற்ற பின்னா், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரிடையே நல்லுறவை பேணும் வகையிலான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தல்படி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் தகவல் பதாகை வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகாா்களுக்கு காவல் நிலையத்தில் மனு ரசீது வழங்காவிட்டால் அதுகுறித்து தொடா்புடைய காவல் துறையின் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எளிதில் தகவல் அளிக்கும் வகையில், அவா்களின் செல்லிடப்பேசி எண்கள் அந்தப் பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.