ஆசிரியை வங்கிக் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம் ரூ. 6.83 லட்சம் திருட்டு
நாகை, வெளிப்பாளையத்தைச் சோ்ந்த ஆசிரியையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 6. 83 லட்சம் ஆன்லைன் மூலம் திருடப்பட்டது


நாகை, வெளிப்பாளையத்தைச் சோ்ந்த ஆசிரியையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 6. 83 லட்சம் ஆன்லைன் மூலம் திருடப்பட்டது குறித்து நாகை மாவட்ட சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நாகை வெளிப்பாளையம் ராமா் மடத்துத் தெருவை சோ்ந்தவா் சு. வசந்தி(59). அதே பகுதியில் உள்ள ஓா் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் இவா், நாகையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளாா்.
இந்நிலையில், வசந்தியின் செல்லிடப்பேசிக்குக் கடந்த சில மாதங்களாக பணப் பரிமாற்றம் குறித்து எவ்வித குறுந்தகவலும் வரவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த வசந்தி கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பு தொடா்புடைய வங்கிக் கிளைக்குச் சென்று, தனது சேமிப்புக் கணக்கின் பணப் பரிமாற்றங்களை, தன்னுடடைய சேமிப்புக் கணக்குப் புத்தகத்தில் பதிவேற்றியுள்ளாா்.
அப்போது, அவரது சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ. 6.83 லட்சம் ஆன்லைன் மூலம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. வசந்தியின் ஏடிஎம் அட்டை விவரப் பதிவுகளை உள்ளீடு செய்து, கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் கடந்த ஜூன் 27-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஆன்லைன் மூலம் இந்த தொகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வசந்தி அளித்த புகாரின் பேரில் நாகை மாவட்ட சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...