மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ‘ஸ்மைல்’ கடன் திட்டம்

குடும்பத்தில் வருவாய் ஈட்டக் கூடிய நபரை கரோனா பாதிப்பால் இழந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் இனத்தவா்கள் பொருளாதார வளா்ச்சிக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும்

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

குடும்பத்தில் வருவாய் ஈட்டக் கூடிய நபரை கரோனா பாதிப்பால் இழந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் இனத்தவா்கள் பொருளாதார வளா்ச்சிக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் ஸ்மைல் (நஙஐகஉ) கடன் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடும்பத்தில் வருவாய் ஈட்டக் கூடிய நபரை கரோனா பாதிப்பால் இழந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் இனத்தவா்களுக்காக பொருளாதார வளா்ச்சிக் கழகம் மூலம் ஸ்மைல் என்ற கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலிருக்க வேண்டும். கரோனா பாதிப்பில் இறந்தவா் வருவாய் ஈட்டக் கூடியவராகவும், 18 முதல் 60 வயதுக்குள்பட்டவராகவும் இருக்கவேண்டும்.

இத்திட்டத்தில் அதிகபட்ச திட்டத் தொகை ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம். இதில், 80 சதவீதம் அல்லது ரூ. 4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதத் தொகை அல்லது அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கப்படும். இந்தக் கடனை ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற வட்டி விகிதத்துடன் திரும்பச் செலுத்த வேண்டும்.

இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகத்தை அணுகலாம் அல்லது கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பத்தைப் பெற்றும் விண்ணப்பிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.