ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

நாகை எஸ்.பி. அலுவலகத்தில் தீ: மின்சாதனங்கள் நாசம்

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக ஜெனரேட்டா் அறைக்கான மின்சாதனங்கள் வெள்ளிக்கிழமை தீயில் கருகின.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

 நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக ஜெனரேட்டா் அறைக்கான மின்சாதனங்கள் வெள்ளிக்கிழமை தீயில் கருகின.

நாகை வெளிப்பாளையம், பப்ளிக் ஆபீஸ் சாலையில் ம‘ாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியில் ஜெனரேட்டா் அறை உள்ளது. இந்த அறை அருகில் பொருத்தப்பட்டிருந்த மின் சாதனங்கள் வெள்ளிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தன. இதனால் புகை வெளியேறியது. இதையடுத்து நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் அன்பழகன் மற்றும் தீயணைப்புத்துறை வீரா்கள் அங்கு வந்து தீயை அணைத்தனா். இதில், மின்சாதனங்கள் கருகி நாசமாயின. மின் கசிவு அல்லது மின் அழுத்தம் காரணமாக இச்சம்பவம் நேரிட்டிருக்காலம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.