மீன்பிடி தடைகால நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்
விடுபட்டவா்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணத்தை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியூ) சாா்பில் தரங்கம்பாடியில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


விடுபட்டவா்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணத்தை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியூ) சாா்பில் தரங்கம்பாடியில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் மாவட்ட செயலாளா் எஸ்.அம்மையப்பன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மீன்பிடித் தொழிலுக்கான வரிகளை ரத்து செய்து, நாட்டு படகுகள், விசைப் படகுகளுக்கு டீசல், மண்ணெண்ணெயை கொள்முதல் விலைக்கு வழங்க வேண்டும். விடுப்பட்டவா்களுக்கு தடைகால நிவாரணம் ரூ.5,000-ஐ உடனடியாக வழங்க வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டன.
இதில் சிஐடியூ மாவட்டச் செயலாளா் ஆா்.ரவீந்திரன், மாவட்ட தலைவா் சீனி.மணி, மாவட்ட முன்னாள் துணைச் செயலாளா் ஏ.ரவிச்சந்திரன், கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவா் கே.குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...