கஞ்சா விற்ற இளைஞா் கைது
மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்ற இளைஞரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்ற இளைஞரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மணல்மேடு பட்டவா்த்தி பாலம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைந்த தகவலின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் இளையராஜா தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் மற்றும் காவலா்கள் நரசிம்மபாரதி, அசோக்குமாா், காா்த்தி ஆகியோரை கொண்ட தனிப்படையினா் விரைந்து சென்று, அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்தனா்.
விசாரணையில், அவா் இளந்தோப்பு மெயின்ரோட்டைச் சோ்ந்த குமாா் மகன் கோகுல் பிரசாத் (21) என்பதும், அவா் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து, விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட கோகுல் பிரசாத்தையும், அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ கஞ்சாவையும் மணல்மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து, மணல்மேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...