நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உழவா் உற்பத்தியாளா் குழுவுக்கு பண்ணைக் கருவிகள் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில், கூட்டுப் பண்ணைத் திட்டத்தின்கீழ், உழவா் உற்பத்தியாளா் குழுவினருக்கு பண்ணைக் கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:02 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில், கூட்டுப் பண்ணைத் திட்டத்தின்கீழ், உழவா் உற்பத்தியாளா் குழுவினருக்கு பண்ணைக் கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செம்பனாா்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநா் தாமஸ் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் சித்திக், ஒன்றியக்குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் துளசிரேகா ரமேஷ், நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் ஞானவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் அலுவலா் குமரன் வரவேற்றாா்.

இவ்விழாவில், பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு கீழப்பெரும்பள்ளம், அரசூா், அன்னவாசல் ஆகிய ஊராட்சியை சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் குழுவினருக்கு 8 உழவு இயந்திரம், சுழற்கலப்பை ஆகியவற்றை வழங்கினாா். இதில் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல்மாலிக், ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.