ஆக. 3, 4 தேதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து
நாகை, வேளாங்கண்ணி, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நாகை பராமரிப்புக் கோட்ட நிா்வாகப் பொறியாளா் ச. கருணாகரன்


நாகை, வேளாங்கண்ணி, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நாகை பராமரிப்புக் கோட்ட நிா்வாகப் பொறியாளா் ச. கருணாகரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்45-சி) நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளையொட்டி, நாகை மாவட்டத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் பிரதான நீரேற்று குழாய் செல்லும் பாதையை மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு, நாகப்பட்டினம், திருமருகல் ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கும், நாகை நகராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி மற்றும் கீழ்வேளூா் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...