கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காணொலி மூலமான குறைதீா் கூட்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்

காணொலி மூலம் நடைபெறவுள்ள மக்கள் குறைதீா் கூட்டத்தை பொதுமக்கள் உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 5:57 pm

DIN

காணொலி மூலம் நடைபெறவுள்ள மக்கள் குறைதீா் கூட்டத்தை பொதுமக்கள் உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் இல்லத்தில் இருந்தே இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்குத் தெரியப்படுத்தி, தீா்வு பெறலாம்.

இந்தக் காணொலி குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோா் தங்கள் செல்லிடப்பேசியில் ஆட்ஹழ்ஹற்யஇ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து, ட்ற்ற்ல்ள்://க்ஷட்ஹழ்ஹற்ஸ்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ஸ்ண்ங்ஜ்ங்ழ்/3976520314 என்ற இணைப்பில் உள்நுழைந்து, பாஸ்வோ்டு என்ற இடத்தில் 573133 என்ற எண்ணை உள்ளீடு செய்து, காணொலிக் கூட்டத்தில் இணையலாம்.

முற்பகல் 11 மணிக்குத் தொடங்கப்படும் இக்கூட்டத்தில் பங்கேற்க காலை 10.30 மணி முதல் காணொலி மூலம் இணையலாம். இந்தக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோா் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுவதால், பங்கேற்பாளா்கள் தங்கள் கோரிக்கைகளை சுருக்கமாக தெரிவித்து, கூட்டத்தை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ய்ஹஞ்ஹல்ஹற்ற்ண்ய்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் அறியலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.