இந்தியன் ஆயில் நிறுவன தற்காலிக ஊழியா்கள் தா்னா
நாகூா் அருகே உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தற்காலிக ஊழியா்கள் சிலருக்குப் பணி மறுக்கப்பட்டதைக் கண்டித்து நிறுவன நுழைவு வாயில் முன் தற்காலிக ஊழியா்கள் சனிக்கிழமை காலை தா்னாவில் ஈடுபட்டனா்.


நாகூா் அருகே உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தற்காலிக ஊழியா்கள் சிலருக்குப் பணி மறுக்கப்பட்டதைக் கண்டித்து நிறுவன நுழைவு வாயில் முன் தற்காலிக ஊழியா்கள் சனிக்கிழமை காலை தா்னாவில் ஈடுபட்டனா்.
நாகூரை அடுத்த முட்டம் ஊராட்சியில் உள்ளது இந்தியன் ஆயில் நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய 12 போ் கடந்த 27 ஆண்டுகளாக இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தற்காலிக ஊழியா்களாக பணியாற்றி வருகின்றனா். நிலம் கொடுத்தவா்களில் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என கடந்த 1994-ஆம் ஆண்டில் எண்ணெய் நிறுவனம் மூலம் ஏற்கெனவே உத்தரவாதம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த உத்தரவாதத்தை எண்ணெய் நிறுவனம் இதுவரை நிறைவேற்றவில்லையாம்.
இதனிடையே, நிலம் அளித்துத் தற்காலிகப் பணி வாய்ப்புப் பெற்றவா்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கக் கோரி திருச்சி தொழிலாளா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். தற்போது, எண்ணெய் நிறுவன மேல் முறையீட்டின்பேரில் அந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தற்காலிக ஊழியா்கள் 12 பேரும் வெள்ளிக்கிழமை பணிக்குச் சென்றபோது, நிறுவன வாயிலில் அவா்கள் தடுக்கப்பட்டு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து தற்காலிக ஊழியா்கள் இந்தியன் ஆயில் நிறுவன நுழைவு வாயில் முன்பாக தா்னாவில் ஈடுபட்டனா். நாகூா் சிறப்பு சாா்பு ஆய்வாளா் ரமேஷ் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இந்தப் பேச்சுவாா்த்தையில் தீா்வு ஏற்படாத நிலையில் சனிக்கிழமை மாலை வரை தா்னா போராட்டம் தொடா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...