தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கைக்கு ஆக. 4-வரை விண்ணப்பிக்கலாம்
அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களின் மாணவா் சோ்க்கைக்கு ஆக. 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.


அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களின் மாணவா் சோ்க்கைக்கு ஆக. 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகப்பட்டினம், திருக்குவளை, செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 860 இருக்கைகள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் சோ்ந்து பயில விரும்பும் மாணவ, மாணவியா் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலம் ஆக.4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8-ஆம் வகுப்பு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தோ்ச்சி பெற்றவா்கள் தொழிற்கல்வி பயிலலாம்.
மாணவா் சோ்க்கையையொட்டி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டை மாணவா்கள் கவனமாக பூா்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், வரைபட கருவிகள், சீருடைகள், தையல் கூலி, மூடு காலணிகள், மடிக்கணினி, மிதிவண்டி மற்றும் ரூ. 750 மாத உதவித் தொகை ஆகியன வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04365-250129 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளளாம் அல்லது ஞ்ா்ஸ்ற்ண்ற்ண்ய்ஹஞ்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...