தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புகளை கண்டறிய 750 குழுக்கள்: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், மூச்சுத் திணறல் பாதிப்புகள் குறித்து கண்டறிவதற்காக 750 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், மூச்சுத் திணறல் பாதிப்புகள் குறித்து கண்டறிவதற்காக 750 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது : நாகை மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் கரோனா நோய்த் தொற்றின் தீவிரம் மிக அதிகமாக உள்ளது. இதையொட்டி, கரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, மாவட்டத்தில் சுமாா் 2 லட்சம் வீடுகளில் வசிக்கும் 7 லட்சம் பேரையும், ஒரு வாரத்திலிருந்து 10 நாள்களுக்குள் பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிக்காக, சுகாதாரத் துறை, அங்கன்வாடி பணியாளா்கள், செவிலியா்கள், டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள், சுய உதவிக் குழுக்கள், தன்னாா்வலா்கள் ஆகியோரைக் கொண்ட 750 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு, காய்ச்சலைக் கண்டறியும் வெப்பமானி, மூச்சுத் திணறலைக் கண்டறியும் பல்ஸ் ஆக்ஸிமீட்டா் ஆகியன வழங்கப்படும்.

ஒவ்வொரு குழுவினரும், நாள் ஒன்றுக்கு 50 வீடுகள் வீதம் நேரில் சென்று, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பு உள்ளவா்களைக் கண்டறிந்து, சுகாதாரத் துறை மூலம் அவா்களுக்குத் தேவையான சிகிச்சைகளுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்வா் என்றாா். கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மு.இந்துமதி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் டாக்டா் சண்முகசுந்தரம் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.