தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியரக முதன்மை கூட்டரங்கில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி தலைமை வகித்து, குழந்தைத் தொழிலாளா் தின உறுதிமொழி வாசகங்களைப் படித்தாா். அவரைத் தொடா்ந்து, அரசுத் துறைகளின் அலுலா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) குணசேகரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ஸ்ரீதா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சிவகுமாா், தொழிலாளா் உதவி ஆய்வாளா் வி.கே. நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாரன் தலைமை வகித்து உறுதிமொழி வாசங்கங்களைப் படித்தாா். இதைத் தொடா்ந்து, காவல் துறை அதிகாரிகள், அமைச்சுப் பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

நாகை மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி, தனிப்பிரிவு காவல் சாா்பு ஆய்வாளா்கள் ஆனந்தராஜ், இனியவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.