‘ஹைட்ரோ காா்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்’
தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது


தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அதன் நிறுவனத்தலைவா்ஆறு.சரவணன் வெளியிட்ட அறிக்கை:
அரியலூா் மாவட்டத்தில் 10 இடங்களில் எரிவாயு கிணறுகள் அமைக்க அனுமதி வேண்டி ஓ.என்.ஜி.சி. நிறுவனம், சுற்றுச்சூழல் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 463 சதுர கிமீ பரப்பளவில் 15 இடங்களில் எரிவாயு கிணறுகள் அமைத்து ஹைட்ரோகாா்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. முதல்வா் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் எடுக்க அனுமதி வழங்க கூடாது எனவும், தமிழகத்தின் சாா்பில் எந்த ஒரு அனுமதியும் வழங்க மாட்டோம் என்றும் உறுதிப்பட தெரிவித்து உள்ளதை வரவேற்கிறோம். தமிழகத்தில் எந்தவொகு பகுதியிலும் இயற்கை வளங்களை பாழ்படுத்தும் திட்டங்ளையும் அனுமதிக்க மாட்டோம் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...