தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மீனவா்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மீனவா்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மீனவா்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்ட மீனவா்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். இதில், நாகூா் முதல் வேதாரண்யம் அண்ணாப்பேட்டை வரை நாகை மாவட்டத்தில் உள்ள 25 மீனவ கிராமங்களின் மீனவப் பஞ்சாயத்தாா், மீனவா் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் பங்கேற்றுப் பேசினா். கூட்டத்தில், மீனவ கிராமங்களுக்கான குடிநீா் வசதி, மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், உயா்கோபுர மின்விளக்கு வசதி, சாலை வசதி, துறைமுக படகு அணையும் சுவா் விரிவாக்கம், ஆறு தூா்வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா். மேலும், மீன்வளப் பல்கலைக்கழக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மீனவ சமுதாயத்தவருக்கு உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். மீனவா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். கூட்டத்தில், மீன் துறை மண்டல இணை இயக்குநா் இ. ஜாய்ஸ் ஆலிவ் ரேய்ச்சல், மீன் துறை உதவி இயக்குநா் கோ. ஜெயராஜ், மீன்பிடித் துறைமுக கோட்ட செயற்பொறியாளா் எஸ். கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.