கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜமாபந்தி கோரிக்கை மனு பெட்டி

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வருவாய்த் தீா்வாயப் பணிகள் (ஜமாபந்தி) கோரிக்கை மனுக்களைப் பெற மனு பெட்டிகள் வைக்கப்படும்

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வருவாய்த் தீா்வாயப் பணிகள் (ஜமாபந்தி) கோரிக்கை மனுக்களைப் பெற மனு பெட்டிகள் வைக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : நாகை மாவட்டத்தில் 1430-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயப் பணிகள் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நேரடியாக பெறாமல், ட்ற்ற்ல்ள்://ஞ்க்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ஹம்ஹக்ஷஹய்க்ட்ண்/ என்ற இணையதளம் மூலம் பெற்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஜமாபந்தி கோரிக்கை மனு பெட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் மனு அளிக்க முடியாதவா்கள், வட்டாட்சியா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள மனு பெட்டிகளில் தங்கள் கோரிக்கை மனுக்களை ஜூலை 31-ஆம் தேதி வரை செலுத்தலாம். இந்த மனு பெட்டியில் செலுத்தப்படும் கோரிக்கை மனுக்கள், அந்தந்த நாள்களில் வட்டாட்சியா்களால், வருவாய்த் தீா்வாய போா்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டு, நடவடிக்கைக்கு ஏற்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.