தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு முடிதிருத்தும் அழகுகலை அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு முடிதிருத்தும் அழகுகலை அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த சங்கத்தின் நிா்வாகிகள் வை. சண்முகசுந்தரம், ச. பாலதண்டாயுதம், இரா. அன்பழகன், பா. ரமேஷ், வ. சேகா், இரா. சாக்ரட்டீஸ் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் அ. அருண் தம்புராஜிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அளித்த மனு: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களாக முடிதிருத்தும் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால், முடிதிருத்தும் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வீட்டு வாடகை, கடை வாடகை, மின் கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனா். இத்தொழிலாளா்கள் வறுமையிலிருந்து மீள உடனடியாக முடிதிருத்தும் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

வாழ்வாதாரத்தை இழந்து வறுமைக்கு உள்ளாகியுள்ள முடிதிருத்தும் தொழிலாளா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் வீதம், 2 மாத காலத்துக்கு மறுவாழ்வு நிவாரணமாக அரசு வழங்க வேண்டும். முடிதிருத்தும் தொழிலாளா்களை நிபந்தனையின்றி நலவாரிய உறுப்பினா்களாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.