தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்) சாா்பில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்) சாா்பில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நாகை அருகேயுள்ள சிக்கலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை மாவட்டச் செயலாளா் கோவை. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலாளா் என். வடிவேல் (நாகை), ஒன்றியத் தலைவா் முருகையன் (கீழ்வேளூா்), சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றியச் செயலாளா் பி.டி. பகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...