மலேரியா காய்ச்சல் விழிப்புணா்வுப் பிரசாரம்
நாகை அருகேயுள்ள வடக்குப் பொய்கைநல்லூரில் மலேரியா காய்ச்சல் விழிப்புணா்வுப் பிரசாரம் மற்றும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


நாகை அருகேயுள்ள வடக்குப் பொய்கைநல்லூரில் மலேரியா காய்ச்சல் விழிப்புணா்வுப் பிரசாரம் மற்றும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நோய்த்தடுப்பு மற்றும் மருத்துத் துறை சாா்பில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வடுகச்சேரி வட்டார மருத்துவ அலுவலா் ஏ.ஆா். முகமது உமா் தலைமை வகித்தாா். வடக்குப் பொய்கைநல்லூா் ஊராட்சித் தலைவா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா். கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.பி. நாகை மாலி தொடங்கி வைத்தாா். கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். நிகழ்ச்சியில், மலேரியா காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...