விலையில்லா தையல் இயந்திரங்கள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்கள் விலையில்லா தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.


பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்கள் விலையில்லா தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் சத்தியவாணி முத்து அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம், விலையில்லா தையல் இயந்திரங்கள் பெறுவதற்கு 20 முதல் 40 வயதுக்குள்பட்ட விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமலிருப்பதை உறுதி செய்யும் வருமானச் சான்று (வட்டாட்சியரிடம் பெற்றது), இருப்பிடச் சான்று அல்லது குடும்ப அட்டை நகல், குறைந்தபட்சம் 6 மாத காலம் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று நகல், வயதுச் சான்று, சாதிச் சான்று, ஆதாா் அட்டை நகல், மாா்பளவு புகைப்படங்கள் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்று இருந்தால் அதன் நகலையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தகுதியானவா்கள் தங்கள் விண்ணப்பங்களை, மாவட்ட சமூக நல அலுவலா், நீலா தெற்கு வீதி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாகப்பட்டினம் 611001 என்ற முகவரிக்கு ஜூலை 9-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...