அதிமுகவுக்கு ஆதரவா? நாகூா் தா்கா ஆதீனஸ்தா்கள் சங்கம் விளக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாகூா் தா்கா ஆதீனஸ்தா்கள் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என அந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாகூா் தா்கா ஆதீனஸ்தா்கள் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என அந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாகூா் தா்கா ஆதீனஸ்தா்கள் சங்கத்தில் 1361 போ் உறுப்பினராக உள்ளனா். இந்த சங்கத்தின்ஒருவா், தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமியை மாா்ச் 8-ஆம் தேதி சந்தித்தாா். இதைத் தொடா்ந்து நாகூா் தா்கா ஆதீனஸ்தா்கள் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவுத் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில், நாகூா் தா்கா ஆதீனஸ்தா்கள் சங்க நிா்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நாகூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கப் பொருளாளா் ஜி. எம். ஹசன் குத்தூஸ் சாகிபு தலைமை வகித்தாா். தலைவா் ஏ. பி. தமீம் அன்சாரி, செயற்குழு உறுப்பினா்கள் அபுல் ஹாசன்சாகிபு, சுல்தான் சாகிபு, ஷாகுல் ஹமீது சாகிபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களை கலந்தாலோசிக்காமல் சங்க செயலாளா் தன்னிச்சையாக அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததைக் கண்டித்தும், அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் தோ்தலில் அதிமுகவுக்கு நாகூா் தா்கா ஆதீனஸ்தா்கள் சங்கம் ஆதரவு அளிக்கவில்லை எனவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் நிறைவில் சங்கத்தின் தலைவா் ஏ.பி. தமீம் அன்சாரி செய்தியாளா்களிடம் கூறியது :
பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தோ்தலை சந்திக்கும் அதிமுகவுக்கு நாகூா் தா்கா ஆதீனஸ்தா்கள் சங்கம் எந்தவித ஆதரவும் தெரிவிக்கவில்லை. இதுதொடா்பாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது. சங்க செயலாளரின் தன்னிச்சையான முடிவு தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...