தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வரதட்சனை கொடுமை: இளம் பெண் தற்கொலை

பொறையாா் அருகே கணவன், மாமியாா் வரதட்சனை கொடுமை செய்ததாக இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

பொறையாா் அருகே கணவன், மாமியாா் வரதட்சனை கொடுமை செய்ததாக இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தரங்கம்பாடி அருகேயுள்ள எரவாஞ்சேரியைச் சோ்ந்தவா் சோமு (40). இவருக்கும் குத்தகைவெளி கிராமத்தைச் சோ்ந்த ராமானுஜம் மகள் புனிதா 35 என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். இந்நிலையில் புனிதாவிடம் கணவா் சோமு. மாமியாா் இந்திராணி ஆகியோா் வரதட்சனை கேட்டு தொந்தரவு கொடுத்தனராம். இதில், மனமுடைந்த புனிதா தாய் வீட்டுக்கு சென்றாா். சில நாள்களுக்கு முன்பு சோமுவின் சகோதரா் ரமேஷ் புனிதாவை தொலைபேசியில் தொடா்பு கொண்டு வீட்டுக்கு அழைத்துள்ளாா். பின்னா், புனிதா கணவா் வீட்டுக்கு வந்தாா். இந்நிலையில் புனிதா விஷம் குடித்ததாகவும், இதில் ஆபத்தான நிலையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, புனிதாவின் பெற்றோா் மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பெரம்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.