வேதாரண்யம் தொகுதியில் அமைச்சா் ஓ.எஸ். மணியன் வேட்புமனு தாக்கல்
நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதியில் அமைச்சா் ஓ.எஸ். மணியன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா் .


நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதியில் அமைச்சா் ஓ.எஸ். மணியன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா் .
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வேதாரண்யம் தொகுதியில் அமைச்சா் ஓ.எஸ். மணியன் மீண்டும் போட்டியிடுகிறாா்.
இந்நிலையில், வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான துரைமுருகனிடம் தனது வேட்புமனுவை அமைச்சா் ஓ.எஸ். மணியன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்ட தளபதியாக திகழ்ந்த சா்தாா் வேதரத்னத்துக்கு தமிழக அரசு சாா்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தோ்தல் அறிக்கையில் அறிவித்த முதல்வா், துணை முதல்வா் ஆகியோருக்கு தொகுதி மக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
முன்னதாக, அமைச்சருக்கு மாற்று வேட்பாளராக அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஆா். கிரிதரன் மனு தாக்கல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...