வேளாங்கண்ணியில் பாமக வேட்பாளா் தீவிர வாக்குச் சேகரிப்பு
கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளா் எஸ். வடிவேல் ராவணன் வேளாங்கண்ணி பகுதியில் திங்கள்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.


கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளா் எஸ். வடிவேல் ராவணன் வேளாங்கண்ணி பகுதியில் திங்கள்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
கீழ்வேளூா் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் பாமகவைச் சோ்ந்த எஸ். வடிவேல் ராவணன் போட்டியிடுகிறாா். கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரான இவருக்கு தோ்தல் ஆணையம் மாம்பழம் சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், வேட்பாளா் அறிமுகக் கூட்டம் வேளாங்கண்ணியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றுப் பேசினா்.
வாக்குச் சேகரிப்பு: வாக்குச் சேகரிப்பின் தொடக்கமாக வேளாங்கண்ணி புனித ஆரோகிய அன்னை பேராலயத்தில் எஸ். வடிவேல் ராவணன் வழிபாடு மேற்கொண்டனா். தொடா்ந்து, வேளாங்கண்ணி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வணிகா்கள், பொதுமக்களிடத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...