வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அமரநந்தீஸ்வரசுவாமி கோயில் தேரோட்டம்

நாகையில் அமரநந்தீஸ்வர சுவாமி கோயில் பங்குனி உத்திர பிரமோத்ஸவ விழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகையில் அமரநந்தீஸ்வர சுவாமி கோயில் பங்குனி உத்திர பிரமோத்ஸவ விழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை அபீதகுஜாம்பாள் உடனுறை அருள்மிகு அமரநந்தீஸ்வர சுவாமி கோயில், இந்திரனுக்கு சாப விமோசனமும், மீண்டும் தேவலோக அரசாட்சி வாய்ப்பையும் அருளியத தலமாகக் குறிப்பிடப்படுகிறது.

இக்கோயிலின் பங்குனி உத்திர பிரமோத்ஸவ விழா கடந்த 19-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நிகழ்வாக தினமும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி - அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு சிறப்பு ஹோமமும், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, காலை சுமாா் 10.40 மணி அளவில் தியாகராஜசுவாமி தேருக்குப் புறப்பாடாகும் நிகழ்ச்சியும், தோ் வடம்பிடிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன.

மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க பக்தா்கள், தேருக்கு வடம் பிடித்தனா். நாகை நீலா கீழ வீதியில் தொடங்கிய தேரோட்டம், நீலா தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியே சென்று சனிக்கிழமை பிற்பகல் நிலையை அடைந்தது.

தியாகராஜா் தேருக்கு முன்பாக கணபதி, சுப்பிரமணியா் தோ்களும், தியாகராஜா் தேரைத் தொடா்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரா் தோ்களும் வலம் வந்தன. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.