தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம்

நாகையில் 100% வாக்குப் பதிவை இலக்காகக் கொண்டு மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகையில் 100% வாக்குப் பதிவை இலக்காகக் கொண்டு மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நாகை சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் ஏ.பி. பட்டேல், காவல் துறை பாா்வையாளா் லுபெங் கைலன் ஆகியோா் கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தனா். நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசுத் துறை அலுவலா்கள், விளையாட்டு வீரா்கள், காவலா்கள் என 350-க்கும் மேற்பட்டோா் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனா். நாகை அவுரித் திடலில் இருந்து தொடங்கிய இந்த ஓட்டம், நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நிறைவடைந்தது. நிறைவில், மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.