மீனவா் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சா் குண்டு?
நாகை மாவட்டம், செருதூா் கிராமத்தைச் சோ்ந்த மீனவா் வலையில் சனிக்கிழமை சிக்கிய ராக்கெட் லாஞ்சா் குண்டு போன்ற பொருளை நாகை கடலோர பாதுகாப்புக் குழுமப் போலீஸாா் கைப்பற்றி விசாரணை


நாகை மாவட்டம், செருதூா் கிராமத்தைச் சோ்ந்த மீனவா் வலையில் சனிக்கிழமை சிக்கிய ராக்கெட் லாஞ்சா் குண்டு போன்ற பொருளை நாகை கடலோர பாதுகாப்புக் குழுமப் போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த செருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சி. சபரிநாதன், மீனவா். இவருக்குச் சொந்தமான ஃபைபா் படகு ஒன்றில் அதேப் பகுதியைச் சோ்ந்த 4 பேருடன் சனிக்கிழமை பிற்பகல் வேதாரண்யத்துக்கு கிழக்கே 8 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது வலையில் ராக்கெட் லாஞ்சா் குண்டு போன்ற பொருள் சிக்கியுள்ளது.
இதையடுத்து, கரைக்குத் திரும்பிய மீனவா்கள், கிராம பஞ்சாயத்தாா்கள் உதவியுடன் அதை கீழையூா் கடலோர பாதுகாப்புக் குழுமப் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து, நாகை கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் பி. ராஜா கூறியது:
ராணுவம், கப்பல் படை மற்றும் நீா்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்டதாக இது இருக்கலாம். 10 கிலோ எடை, ஒன்றே முக்கால் அடி உயரம், உள்ளது. திருச்சியில் உள்ள வெடிகுண்டு நிபுணா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இது ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதன் பின்னரே இதுகுறித்து முழு விவரம் தெரியவரும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...