வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் 10 போ் மீது வழக்கு
நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் 10 மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.


நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் 10 மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் 2-ஆம் அலை தீவிரமடைந்து வருகின்றது. குழந்தைகள் மற்றும் இளைஞா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகின்றன. பொதுமுடக்கத் தடையை மீறுவா்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நாகை மற்றும் கீழ்வேளூரில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத காய்கறி கடைகள் மற்றும் சிறுவணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் 10 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...