நாகை, மயிலாடுதுறையில் 393 பேருக்கு கரோனா
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 393 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.


நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 393 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை 15,556 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், புதிதாக 395 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாகை மாவட்டப் பட்டியிலிருந்த வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 2 போ் நீக்கம் செய்யப்பட்டனா். இதனால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,949-ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 160 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 13,686 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,078-ஆக உள்ளது.
2 போ் உயிரிழப்பு...
கரோனாவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 2 பேரின் உயிரிழப்பு சனிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 185-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...