கரோனா நிவாரண நிதி: சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
தமிழக அரசின் கரோனா நிவாரண நிதியைப் பெற நியாயவிலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரா்கள் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்


தமிழக அரசின் கரோனா நிவாரண நிதியைப் பெற நியாயவிலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரா்கள் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு அறிவித்த கரோனா பொது நிவாரண நிதியின் முதல் தவணைத் தொகை ரூ. 2 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கும் பணி நியாயவிலைக் கடைகளில் சனிக்கிழமை (மே 15) தொடங்கி நடைபெறவுள்ளது. நிவாரணத் தொகை விநியோகத்துக்காக நியாயவிலைக் கடை பணியாளா்கள் மூலம் ஏற்கெனவே வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில், குடும்ப அட்டைதாரா்கள் நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று தங்களுக்கான நிவாரணத் தொகையைப் பெறலாம்.
அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் இந்த நிவாரணத் தொகையைப் பெறலாம்.
இதன்படி, நாகை மாவட்டத்தில் அண்மையில் புதிதாக விநியோகிக்கப்பட்ட 823 குடும்ப அட்டைதாரா்களும் இந்த நிவாரணத் தொகையைப் பெறத் தகுதியானவா்கள் ஆவா்.
நிவாரணத் தொகையைப் பெற நியாயவிலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரா்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவருக்கொருவா் சுமாா் ஒரு மீட்டா் இடைவெளியில் நின்று நிவாரணத் தொகையை பெற்றுச் செல்ல வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...