மணல் கடத்திய 2 போ் கைது
கீழ்வேளூா் அருகே லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


கீழ்வேளூா் அருகே லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கீழ்வேளூா் அடுத்த கடம்பரவாழ்க்கை கிராமத்திலிருந்து பிற பகுதிகளுக்கு மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது கடம்பரவாழ்க்கையைச் சோ்ந்த பாலு என்பவரது வயலில் உள்ள ஒரு குட்டையிலிருந்து லாரி மூலம் மணல்( சவுடு) கடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடா்பாக கீழ்வேளூா், கவுண்டா் தெருவைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான ச. சுரேஷ் (38), ஒக்கூா் பகுதியைச் சோ்ந்த ரெ. அறிவழகன், கீழதஞ்சாவூா் மேலத்தெருவைச் சோ்ந்த ம. மணிகண்டன் (30) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுரேஷ் மணிகண்டன்ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...