ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கான ஆயத்தப் பணிகள் ஆட்சியா் ஆய்வு

வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :15 மே 2021, 6:30 pm

DIN

வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தேவைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 75 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவப்படவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை ஆட்சியா் பிரவீன் பி. நாயா் நேரில் ஆய்வு செய்தாா்.

பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா தொற்று பரவிவரும் சூழலில் நாகை மாவட்ட மருத்துவமனைகளில் சாதாரண படுக்கை வசதிகளை பொறுத்தவரை 60 சதவீதம் நிரம்பி உள்ளன. ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகளை பொறுத்தவரை 95 சதவீதம் நிரம்பியுள்ளன.

நாகையில் மருத்துவக் கல்லூரி அமையவுள்ளதால், வேதாரண்யம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் சிறிய கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டா்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிக கொள்ளளவு கொண்ட 20 ஆக்சிஜன் சிலிண்டா்கள் கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால், இனிவரும் காலங்களில் வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியினா் இந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது, ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசின் நிதியில் தமிழகத்தில் 78 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்படவுள்ளன. இதில், முதல்கட்டமாக 5 இடங்களில் தொடங்கப்படும் ஆலைகளில் ஒன்றை, வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்க பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகள் 15 நாள்களில் முடிக்கப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும். அவ்வாறு தொடங்கும் பட்சத்தில் நிமிடத்துக்கு 500 லிட்டா் வீதம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றாா் ஆட்சியா்.

ஆய்வில், கோட்டாட்சியா் துரைமுருகன், வேதாரண்யம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் முருகப்பன், நகராட்சி ஆணையா் மகேஸ்வரி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.மீ. செல்வகுமாா், உதவி பொறியாளா் பிரதான்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.