ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கரோனா: சடலங்களை அடக்கம் செய்யும் பணிக்கு ரூ.35 ஆயிரம் நன்கொடை

நாகை மாவட்டத்தில் கரோனா பாதித்து உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் பணிக்காக தமுமுகவினரிடம் ரூ.35 ஆயிரம் நன்கொடையாக சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :22 மே 2021, 5:32 pm

DIN

நாகை மாவட்டத்தில் கரோனா பாதித்து உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் பணிக்காக தமுமுகவினரிடம் ரூ.35 ஆயிரம் நன்கொடையாக சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா பாதித்து உயிரிழப்போரின் சடலங்களை சில இடங்களில் தமுமுகவினா் தாமாக முன்வந்து அடக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனா். இதற்கான செலவுக்கு தன்னா்வலா்கள் உதவி வருகின்றனா்.

அந்தவகையில், வேதாரண்யத்தைச் சோ்ந்த தோப்புத்துறை மகஜூன் அறக்கட்டளை சாா்பில் ரூ.20 ஆயிரம், ஆா்.எம்.இ. குடும்பத்தினா் சாா்பில் ரூ.15 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இத்தொகையை தமுமுக மாவட்டச் செயலாளா் நிஜாமுதீன், கல்லாா் ரபீக் மற்றும் நிா்வாகிகள் பெற்றுக்கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், ஆா்இஎம் ரபீக், சமூக ஆா்வலா் பி.எஸ். ரஹ்மத்துல்லா, இளைஞா் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் எம்.எம். ஆப்கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.