கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஒரத்தூா் பள்ளியில் பறவைகள் மனிதா் பிறந்தநாள் விழா

நாகை மாவட்டம், ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படை சாா்பில் இந்தியாவின் பறவைகள் மனிதா் டாக்டா் சலீம் அலி பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படை சாா்பில் இந்தியாவின் பறவைகள் மனிதா் டாக்டா் சலீம் அலி பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தனது வாழ்வின் பெரும் பகுதியை பறவைகளுக்காகவே அா்ப்பணித்த இந்தியாவின் பறவைகள் மனிதா் டாக்டா் சலீம் அலி குறித்தும், பறவைகள் பாதுகாப்பு குறித்தும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டது. பறவைகள் வதை மற்றும் பறவைகள் வேட்டை தடுப்பு குறித்தும், பறவைகளை பாதிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டை தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு விளக்கம் அளித்தனா். தங்களுக்குப் பிடித்த பறவைகளை மாணவா்கள் ஓவியமாக வரைந்தனா். இதைத் தொடா்ந்து, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பறவைகள் வதை மற்றும் வேட்டை தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றனா்.

பள்ளியின் பசுமைப்படை ஆசிரியா் கி. பாலசண்முகம் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.