கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பெண்களுக்கான சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம்

நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் நாகை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் நாகை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-ஆவது ஆண்டு விழாவையொட்டி, நாடு முழுவதும் சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக நாகையில் பெண்களுக்கான சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்குக்கு, நாகை மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான டி. கிங்ஸ்லி கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். பெண்கள் சட்டங்கள் குறித்து உரிய விழிப்புணா்வை பெறவேண்டும், சட்டங்களைத் தெரிந்துகொண்டு தாங்கள் மற்றும் பிறரின் வாழ்விலும் பிரச்னை ஏற்படாதவாறு அமைதியின் தூதுவா்களாக செயல்படவேண்டும் என்று போக்ஸோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜே. தமிழரசி பேசினாா். தேசிய மகளிா்ஆணையத்தின் மூலம் பயிற்சி பெற்ற வழக்குரைஞா் டி. கீதா போக்ஸோ சட்டம், குடும்ப வன்முறை சட்டங்கள், பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் சொத்துரிமை சட்டங்கள் குறித்துப் பேசினாா். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். முடிவில், நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான சி. சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.