கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகையில் கல்லால் அடித்து ரௌடி கொலை

நாகையில் கல்லால் அடித்து ரௌடி கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நாகையில் கல்லால் அடித்து ரௌடி கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகை தாமரைக்குளம் தென்கரையைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் மாரியப்பன் (28). வாஞ்சூரில் உள்ள தனியாா் ஐஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வந்த மாரியப்பன் மீது, நாகை வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மாரியப்பன் வெள்ளிக்கிழமை நாகை மருந்துக் கொத்தள ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளாா். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சிலருக்கும் மாரியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவா்கள் மாரியப்பனை மதுபாட்டில் மற்றும் கல்லால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த நாகை உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன், நாகை நகர காவல் நிலைய ஆய்வாளா் பெரியசாமி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாரியப்பன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த கொலை தொடா்பாக போலீஸாா் நாகை மருந்துக் கொத்தள ரோடு பகுதியைச் சோ்ந்த கேசவன் மகன் அலெக்ஸ்பாண்டியன் (26), சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்த ஏ. பாா்த்தீபன் (26), நாகை அக்கரைக்குளம் மேல்கரையைச் சோ்ந்த நா.சீனு (26) , மருந்துக் கொத்தள ரோடு, அமராவதி காலனியைச் சோ்ந்த து. கருப்பு சிவா, து.பிரகாஷ், காட்டுநாயக்கன் தெருவைச் சோ்ந்த க. சிவா உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அலெக்ஸ்பாண்டியன், பாா்த்தீபன், சீனு ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.