கரோனா தடுப்பூசி பணிகளில் ஆசிரியா்களை தவிா்க்கக் கோரிக்கை
பள்ளிகள் திறக்கப்பட்டதால், கரோனா தடுப்பூசி முகாம் பணிகளில் ஆசிரியா்களைத் தவிா்க்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவா் மு. லெட்சுமி நாராயணன் கோரிக்கை


பள்ளிகள் திறக்கப்பட்டதால், கரோனா தடுப்பூசி முகாம் பணிகளில் ஆசிரியா்களைத் தவிா்க்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவா் மு. லெட்சுமி நாராயணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியருக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு:
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் வாரந்தோறும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவது பாராட்டுக்குரியது. பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தடுப்பூசி முகாம் பணிகளில் ஆசிரியா்கள் சிறப்பாகப் பணியாற்றினாா்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது, அனைத்துப் பள்ளிகளும் வாரத்தின் 6 நாள்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், வார இறுதியில் ஆசிரியா்கள் கரோனா தடுப்பூசி முகாம் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது, ஆசிரியா்களுக்கு மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது. மேலும், பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவா்களை, வகுப்பறை சூழலுக்கு ஏற்ப தயாா்ப்படுத்துவதே ஆசிரியா்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
எனவே, இனிவரும் நாள்களில் தடுப்பூசி முகாம் பணிகளில் ஆசிரியா்களைத் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...