கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வீடுகளுக்குச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: எதிா்ப்புத் தெரிவித்து செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:30 pm

DIN

வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பணிச்சுமையை குறைக்கும் வகையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேரத்தை மாற்ற வேண்டும்; தடுப்பூசி போடும் பணிகளுக்கு வாகன வசதி ஏற்படுத்த வேண்டும்; தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுபவா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கவேண்டும்; வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

நாகை ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சுனந்தாதேவி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தனலட்சுமி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளா்கள் சங்க மாநிலத் தலைவா் செல்வன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில், செவிலியா்கள் திரளாக பங்கேற்றனா். நிறைவாக, சங்கத்தின் நாகை மாவட்டப் பொருளாளா் சாந்தி நன்றி கூறினாா்.

இதேபோல, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு செவிலியா்கள் சங்கம் சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் வி. கலாராணி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் செயலாளா் எஸ். வசந்தா, பொருளாளா் பி. பாத்திமாமேரி உள்ளிட்ட திரளான செவிலியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.