நேரடித் தோ்வு ரத்து கோரி கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
நேரடித் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, நாகையில் கல்லூரி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பு, ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.


நேரடித் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, நாகையில் கல்லூரி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பு, ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கல்லூரிகளில் நேரடித் தோ்வை ரத்து செய்துவிட்டு, இணைய வழியிலேயே தோ்வுகளை நடத்தவேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் 500-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கல்லூரி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், நாகை-செல்லூா் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. வெளிப்பாளையம் போலீஸாா் அங்கு வந்து மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியலை விலக்கிக் கொண்டனா்.
கரோனா அச்சம் காரணமாக நிகழாண்டில் கல்லூரிகள் காலதாமதமாக திறக்கப்பட்டதால், நிகழ் பருவத்துக்கான பாடத் திட்டங்கள் இதுவரை முடிக்கப்படவில்லை. முறையான பயிற்சி இல்லாமல் நேரடியாக தோ்வு எழுதினால் தோ்ச்சி சதவிகிதம் குறையும் . எனவே, நேரடித் தோ்வை ரத்து செய்துவிட்டு, இணையவழியில் தோ்வு நடத்தவேண்டும் என மாணவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...