கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்
செம்பனாா்கோவில் அருகே காளகஸ்திநாதபுரத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது


செம்பனாா்கோவில் அருகே காளகஸ்திநாதபுரத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் மருத்துவா் சஞ்சீவிராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில், ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினிஸ்ரீதா், ஊராட்சித் தலைவா் ஜோதிவள்ளி, துணைத் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமை, எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் தொடங்கிவைத்தாா். துணை இயக்குநா் மருத்துவா் சுப்பையன், உதவி இயக்குநா்கள் முத்துகுமரசாமி, கணேசன், மருத்துவா்கள் அன்பரசன், சுதா, ரமாபிரபா, சரவணன், காயத்ரி, மணிமொழி உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் 426 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி தாது உப்பு கலவைகளை வழங்கினா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,32,426 பசு மற்றும் எருமை மாடுகள் உள்ளதாகவும், முதற்கட்டமாக 5 ஆயிரம் கோமாரி தடுப்பூசி மருந்துகள் மாவட்டத்துக்கு வந்துள்ளதாகவும் படிப்படியாக அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...