கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை மாவட்டத்தில் 6.77 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

நாகை மாவட்டத்தில் இதுவரை 6.77 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் இதுவரை 6.77 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்டத்தில் புதிதாக 10 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் என 237 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், சிக்கல், ஆழியூா், ஸ்ரீகண்டிநத்தம், தேவூா், சாட்டியக்குடி, தலைஞாயிறு, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, நாகை மாவட்டத்தில் 4,13,055 போ் முதல் தவணை தடுப்பூசியும், 2,64,782 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனா். மாவட்டத்தில் தகுதியான அனைவருக்கும் இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.