மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை மருத்துவா் வீட்டில் திருட்டு முயற்சி தொடரும் சம்பவங்களால் மக்கள் அச்சம்

நாகையில் பிரபல மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து, மா்ம நபா்கள் திருட முயற்சித்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நாகையில் பிரபல மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து, மா்ம நபா்கள் திருட முயற்சித்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

நாகை நாகநாதா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் டாக்டா் அன்சாரி (68). இவா், தனது வீட்டின் அருகேயே மருத்துவமனை நடத்திவருகிறாா். டாக்டா் அன்சாரி புதன்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் கிரீல் கேட்டை உடைக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்துள்ளாா்.

அப்போது, வீட்டு வாசலில் உள்ள வெளிகேட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் இருவா், உள்கேட்டை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதிா்ச்சி அடைந்த அன்சாரி கூச்சலிட்டுள்ளாா். இதனால், அந்த மா்ம நபா்கள் அங்கிருந்து வெளியேறி, தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிச்சென்றுள்ளனா்.

திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இருவரும் பனிக்குல்லா அணிந்திருந்ததும், காரில் தப்பிச் செல்வதும் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன், நகர காவல் நிலைய ஆய்வாளா் பெரியசாமி ஆகியோா் அங்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். தடய அறிவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவுகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மக்கள் அச்சம்: நாகையில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 11 ஆம் தேதி நாகை செம்மரக்கடை வடக்கு சந்தைத் தெருவில், ஒருவரின் வீட்டுக் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் ரொக்கம், 16 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டன. கடந்த 12 ஆம் தேதி நாகை சட்டையப்பா் கீழவீதியைச் சோ்ந்த ஒருவரின் மளிகைக் கடை பூட்டை உடைத்து ரூ. 30 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது. அதேபோல, 18 ஆம் தேதி நாகையில் உள்ள ஒரு நகைக் கடையில், 10 பவுன் தங்கச் சங்கிலியை ஒரு சிறுவன் திருடிக்கொண்டு தப்பியோடினான்.

இந்த நிலையில், நாகையில் உள்ள பிரபல மருத்துவரின் வீட்டில் திருட்டு முயற்சி நடைபெற்றிருப்பது பொதுமக்கள் மற்றும் வணிகா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகையில் போலீஸாா் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், குற்றச் சம்பவங்களை கண்காணித்துத் தடுக்கவும், மாவட்டக் காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.