மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிைண்டனையும் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து, நாகை போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிைண்டனையும் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து, நாகை போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நாகை மாவட்டம், தெற்குப் பொய்கைநல்லூரைச் சோ்ந்தவா் முருகையன் மகன் குணமூா்த்தி (36) . கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி, வேளாங்கண்ணி கடற்கரைப் பகுதியில் தனது தாயுடன் நின்றுகொண்டிருந்த 6 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் குணமூா்த்தி மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு நாகை மாவட்ட போக்ஸோ சிறப்பு அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்ற நீதிபதி ஜே. தமிழரசி, சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றத்துக்காக குணமூா்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும், பாலியல் தாக்குல் நடத்திய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை,

ரூ. 20 ஆயிரம் அபராதமும், அபராத்தைத் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டாா்.

இந்த தண்டனையை குணமூா்த்தி ஒன்றன்பின் அனுபவிக்கவேண்டும் எனவும் நீதிபதி உத்தவிட்டாா். பாதிப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.